8ஆவது பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர்கள் கூட்டம்
2022-07-15 11:44:22

8ஆவது பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர்கள் கூட்டம் ஜுலை 14ஆம் நாள் காணொளி வழியில் நடைபெற்றது. சீன மனிதவளம் மற்றும் சமூகக் காப்புறுதித் துறை அமைச்சர் சோ ஸுயி இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். அப்போது, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைப் பின்பற்றி, உழைப்புக்கான பொது சமூகத்தை உருவாக்குவது, மக்களை முதன்மையாகக் கருத்தில் கொண்டு பொருளாதார மீட்சியை முன்னேற்றுவது, புத்தாக்கத்தின் வழிகாட்டலில் நிலைத்து நின்று அருமையான எதிர்காலத்தை உருவாக்குவது ஆகிய 3 ஆலோசனைகளை அவர் முன்வைத்தார்.

பசுமையான வேலை வாய்ப்பு மற்றும் நிலையான வளர்ச்சி, உறுதித் தன்மையுடன் கூடிய மீட்சிக்கான செயல்திறன் வளர்ச்சி, புதிய வேலை வடிவத்தில் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்பு ஆகியவை பற்றி இக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது. பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தின் அறிக்கை, புதிய வேலை வடிவத்தில் தொழிலாளர்களின் உரிமை நலன் பாதுகாப்புக்கான வழிக்காட்டல் போன்ற ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.