கோத்தபய ராஜப்கசே ராஜிநாமா
2022-07-15 17:09:03

இலங்கையின் அரசுத் தலைவர் பதவியை கோத்தபய ராஜபக்சே வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். அவரின் ராஜிநாமா கடிதம் கிடைக்கப் பெற்றதாக நாடாளுமன்றத் தலைவர் அபய்வர்தனா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அந்நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இடைக்கால அரசுத் தலைவராக தலைமை அமைச்சர ரணில் விக்ரமசிங்கே செயல்படுவார். அரசுத் தலைவரின் அனைத்துக் கடமைகளையும் அவர் மேற்கொள்வார் என்று அபய்வர்தனா தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்றம் வரும் 16ஆம் நாள் கூடுகிறது. அனைத்து உறுப்பினர்களும் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நடைமுறையில் அனைத்து உறுப்பினர்களும் அதிகபட்ச ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அமைதியான சூழலை பொதுமக்கள் உருவாக்க வேண்டும் என்றும்  அவர் கேட்டுக் கொண்டார்.

மற்றொரு செய்தியேட்டின்படி, கோத்தபய ராஜபக்சே, ஐக்கிய அரபு அமீரக விமானம் மூலம் 14ஆம் நாள் இரவு சிங்கப்பூரைச் சென்றடைந்தார்.