பாலைவனத்தில் சோலைவனம் - ஷிஹெஸி நகரம்
2022-07-16 18:17:19

ஜூலை 13ஆம் நாள் மாலை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வடக்கில் ஷிஹெஸி எனும் நகரத்திற்குச் சென்று உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண்மை வளர்ச்சி மற்றும் நகரக் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக குறைந்த மழைபொழிவு மற்றும் வறண்ட காலநிலையுடைய ஒரு சிறிய ஊராக ஷிஹெஸி விளங்கியது. அங்கே உள்ளூர் மக்களின் விடா முயற்சியில், இந்தப் பாலைவனத்தில் அதிசயமான சோலைவனமாக ஷிஹெஸி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர் வாழ்வதற்கான சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரியான நகரமாக ஷிஹெஸியை 2000ஆம் ஆண்டு ஐ.நா தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் 2002ஆம் ஆண்டு தேசிய நிலை தோட்ட நகரம் என்று ஷிஹெஸி அதிகாரப்பூர்வமாகப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.