இலங்கையில் அவசர நிலை மீண்டும் அமல்
2022-07-18 17:09:38

பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு, சமூக வாழ்க்கைக்குத் தேவையான வினியோகம் மற்றும் சேவை ஆகியவற்றிற்கு உத்தரவம் அளிக்கும் விதமாக, இலங்கையில் அவசர நிலை ஜுலை 18ஆம் நாள் முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு 17ஆம் நாள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.

தலைமையமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அரசுத் தலைவராக ஜுலை 15ஆம் நாள் பதவியேற்றார். வரும் 20ஆம் நாளில், நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய அரசுத் தலைவர், புதிய அரசின் அமைப்புப் பணிக்குப் பொறுப்பேற்பார்.