ஃபுகுஷிமா அணு மாசுபட்ட நீர் வெளியேற்றும் திட்டத்துக்குச் சீனா எதிர்ப்பு
2022-07-22 17:22:40

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் விபத்தில் மாசுபட்ட நீரை கடற்பரப்பில் வெளியேற்றுவது தொடர்பாக டோக்கியோ மின்சாரத் தொழில் நிறுவனம் வகுத்த திட்டத்தை, ஜப்பானிய அணு ஆற்றல் திட்ட ஆணையம் ஜுலை 22ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், சர்வதேச சமூகம் மற்றும் ஜப்பானின் உள்நாட்டு மக்களின் அக்கறையை ஜப்பானிய அரசு ஒருபோதும் பொருட்படுத்தாமல், மாசுபட்ட நீரை வெளியேற்றும் பணியை முன்னேற்றி வருகிறது. சீனா இச்செயலை உறுதியுடன் எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் மாசுபட்ட நீரை அகற்றுவது, உலகம் முழுவதும் உள்ள கடல் சூழலுடனும், பசிபிக் ரிம் நாடுகளின் பொது மக்களின் ஆரோக்கியத்துடனும் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இது, ஜப்பானுக்கு தனிப்பட்ட விவகாரம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.