இந்தியாவில் மீண்டும் ஒரு பெண் குடியரசுத் தலைவர்
2022-07-22 10:40:53

இந்தியாவின்  குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு 21ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு எதிர் கட்சியின் வேட்பாளர் யஷ்வந்த் சிங்கைத் தோற்கடித்து வெற்றி பெற்றதாக நாடாளுமன்ற கூட்டாட்சி அவையின் பொதுச்செயலாளர் பி.சி.மோடி அறிவித்தார்.

திரௌபதி முர்மு 25ஆம் நாள் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்திய வரலாற்றில் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவராகவும் 2ஆவது பெண் குடியரசுத் தலைவராகவும் அவர் திகழ்கின்றார்.

திரௌபதி முர்மு 1958ஆம் ஆண்டு ஒடிசாவில் பிறந்தார். 1997ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.