ஐ.நா துணை பொதுச் செயலாளர் நியமனம்
2022-07-26 14:49:16

சீனத் தூதாண்மை அதிகாரி லீ ச்சுன்ஹுவா, பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்று ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் ஜுலை 25ஆம் நாள் அறிவித்தார்.

பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து 2030ம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சியின் நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து செயலாக்குவதற்கு, லீ ச்சுன்ஹுவா வாக்குறுதி அளித்தார். அதற்கு முன், ஆசிய-பசிபிக் பொருளாதாரச் சமூக ஆணையம், ஐ.நா பேரவை, பாதுகாப்பவையின் பல கூட்டங்கள், 20 நாடுகள் குழு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு, ஆசிய-ஐரோப்பிய கூட்டம், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் முதலியவற்றுக்கு அவர் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.