சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்திலிருந்து விலகம் ரஷியா
2022-07-27 10:41:09

2024ஆம் ஆண்டுக்கு பிறகு, ரஷியா, சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்திலிருந்து விலகி, சுற்றுப்பாதையில் சொந்தமான சேவை நிலையத்தை உருவாக்கவுள்ளது என்று ரஷிய தேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமை இயக்குநராக பதவி ஏற்ற பாவ்லிசோஃப் 26ஆம் நாள் தெரிவித்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் சர்வதேச ஒத்துழைப்புக் கட்டுக்கோப்புக்குள் பணி புரிந்த ரஷியா, ஒத்துழைப்பு கூட்டாளிகளுக்கான கடமைகளை நிறைவேற்றும். சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்திலிருந்து விலகுவது ஒரு முன்னாலோசனையுள்ள தீர்மானம் ஆகும் என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்தித்த போது போலிசோஃப் தெரிவித்தார்.