5ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் முன்னேற்றம்
2022-07-28 14:10:32

5ஆவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கும் நிலையில், அதற்கான செய்தியாளர் கூட்டம் ஷாங்காய் மாநகரில் 27ஆம் நாள் நடைபெற்றது.

5வது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி இவ்வாண்டின் நவம்பர் 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது.

தொழில் நிறுவனங்களின் வணிக கண்காட்சி, ஹாங்கியாவ் சர்வதேச பொருளாதார மன்றக் கூட்டம், தேசிய விரிவான கண்காட்சி, பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

தற்போது இதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் திட்டப்படி சீராகவும் சுமுகமாகவும் நடந்து வருகின்றன.

இதுவரை, இத்தாலி, பிரேசில், தாய்லாந்து, சௌதி அரேபியா முதலிய ஏறக்குறைய 50 நாடுகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளன.