சீன மக்கள் விடுதலைப்படை நிறுவப்பட்டதன் 90வது ஆண்டு நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் உரை வெளியீடு
2022-08-01 16:43:35

சீன மக்கள் விடுதலைப்படை நிறுவப்பட்டதன் 90வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங்கின் உரை ஆகஸ்ட் முதல் நாள் "ட்சூ ஷீ" இதழில் வெளியிட்டப்பட்டது.

மக்கள் படையைச் சார்ந்து, சீனத் தேசம் துன்பங்களில் இருந்து விடுபட்டு, சீன மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியையும் சீன மக்கள் மேலும் அருமையான வாழ்க்கையையும் நனவாக்கும் விதம், சீனப்படையை உலகின் முதல் தரம் கொண்ட இராணுவமாக கட்டியமைப்பதை விரைவுபடுத்த வேண்டும்.

உலக அமைதியைப் பேணிகாப்பதில், சீன ராணுவம் எப்போதும் உறுதியான சக்தியாக இருந்து வருகிறது. சீன இராணுவம், சர்வதேச இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை முன் எப்பொழுதும் போல மேற்கொண்டு, மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்க ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றவுள்ளது என்று இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.