பெலோசியின் தைவான் பயணத்துக்குக் கடும் பின்விளைவு:சீனா
2022-08-01 19:03:13

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசி ஆசியாவில் மேற்கொள்கின்ற பயணம் தொடர்பான கேள்விகளுக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சாவ் லீ ச்சியன் ஆக்ஸ்ட் முதல் நாள் பதிலளிக்கையில், பெலோசியின் தைவான் பயணம் குறித்து, சீனா அமெரிக்காவுக்கு பல முறை கடும் எதிர்ப்பு மற்றும் கவனத்தைத் தெரிவித்துள்ளது. அவர் தைவானுக்குச் சென்றால், கடும் பின்விளைவு ஏற்படும் என்று வலியுறுத்தினார்.

இப்பயணம் மேற்கொள்ளப்பட்டால், சீன அரசுரிமை, உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு, சீன-அமெரிக்க உறவு முதலிவற்றுக்கும் தீங்கு விளைவிக்கும். தற்போது சீனா முற்றிலும் தயாராக உள்ளது. சீன மக்கள் விடுதலை படை, இப்பயணத்தை வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அமெரிக்கத் தரப்பு, ஒரே சீனா கொள்கை மற்றும் 3 கூட்டறிக்கைகளைப் பின்பற்றி, இப்பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என்றும் ச்சாவ் லீ ச்சியன் குறிப்பிட்டார்.