பெலோசியின் தைவான் பயணத்துக்குச் சீனப் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த பதில்
2022-08-02 23:48:56

அமெரிக்க மக்களவைத் தலைவர் பெலோசி சீனாவின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவானில் மேற்கொண்ட பயணத்துக்கு சீனப் பாதுகாப்பமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன ராணுவம் நாட்டின் அரசுரிமை மற்றும் இறையாண்மையைப் பேணிக்காக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வெளிப்புற சக்தியின் தலையீட்டையும் தைவான் பிரிவினைச் சூழ்ச்சியையும் தோற்கடிக்கும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 2ஆம் நாளிரவு முதல் தைவான் தீவுக்கு வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு கடல் மற்றும் வான் பரப்பில் ஒரு தொகுதி கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது. தைவான் நீரிணை பகுதியில் நெடுந்தூர குண்டு வீச்சும் தைவானுக்குக் கிழக்கிலுள்ள கடற்பரப்பில் ஏவுகணை செலுத்துவதும் நடத்தப்படும். இவை தைவான் பிரிவினை சக்திக்கு கடும் எச்சரிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.