கண்காணிப்பு நாடான அமெரிக்கா
2022-08-02 17:19:50

கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா உலகளவில் ஒற்று கேட்டு வந்த சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. 2013ம் ஆண்டு ஸ்னோடன் வெளியிட்ட இரகசிய ஆவணத்தில், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புப் பணியகம், 35 வெளிநாட்டுத் தலைவர்களின் தொலைப்பேசி தொடர்பை ஒற்றுக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மறைக்க இடம் இல்லை என்னும் ஸ்னோடன் பற்றி வெளியான புத்தகத்தில், 30 நாட்களில் தொலைத்தூரத்திலிருந்து 9700 கோடி மின்னஞ்சல்கள் மற்றும் 12 ஆயிரத்து 400 கோடி தொலைப்பேசி தரவுகளை அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புப் பணியகம் வேவு பார்த்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 1350 கோடி தரவுகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், பொருளாதாரம், ராணுவம், தொழில் நுட்பம் முதலிய துறைகளில் மேலாதிக்கம் செய்து வரும் அமெரிக்கா, உலகத்தைக் கட்டுப்படுத்தி, சுய நலன்களை பெற முயற்சித்து வருகிறது.