சீன வெளியுறவு அமைச்சரின் உரை
2022-08-03 09:41:28

அமெரிக்கா சீன இறையாண்மையைக் கடுமையாக மீறியது குறித்து சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ உரை நிகழ்த்தினார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஆக்ஸ்ட் 2ஆம் நாள் தைவான் பிரதேசத்தை அடைந்து பயணம் மேற்கொண்டார். ஒரே சீனா என்ற கொள்கையையும் சீன இறையாண்மையையும்  இந்நடவடிக்கை கடுமையாக மீறியுள்ளது. அரசியல் ரீதியாக ஆத்திரமூட்டியுள்ள அமெரிக்கா, சீன பொது மக்களின் கோபத்தையும் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் எதிர்கொண்டுள்ளது என்று வாங் யீ தெரிவித்தார்.

சீனா ஒருங்கிணைப்பு பணியைத் தடை செய்வது, சீன வளர்ச்சியைச் சீர்குலைப்பது, புவிசார் அரசியல் தந்திரத்தில் ஈடுவடுவது, தவறை சரியாக மாற்றுவது உள்ளிட்ட கற்பனைகளை அமெரிக்கா செய்ய கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.