இஸ்தான்புல் சென்றைடந்த உக்ரேன் தானியக் கப்பல்
2022-08-03 18:52:02

உக்ரேனின் ஒத்சா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட முதலாவது தானியக் கப்பல் துருக்கி இஸ்தான்புலுக்கு அருகிலுள்ள கருங்கடலின் முகத்துவாரத்துக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பமைச்சகம் 2ஆம் நாள் தெரிவித்தது.

இந்தக் கப்பலில் 26 ஆயிரம் டன் மக்களாச்சோளம் ஏற்றிச்செல்லப்பட்டது. ரஷியா, உக்ரேன், ஐ.நா, துருக்கி ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட கூட்டு ஒருங்கிணைப்பு மையத்தின் குழு ஒன்று இக்கப்பலில் இறங்கி சோதனை செய்யும் என்று கூறப்பட்டது.