குரங்கம்மை நோய் தடுக்க தவறிய அமெரிக்க அரசு:சுகாதார அதிகாரிகள்
2022-08-04 17:19:11

அமெரிக்க சிஎன்என் செய்தியின்படி, அமெரிக்காவில் குரங்கம்மைக்கான தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், பொது மக்கள் நீண்டகாலம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குரங்கம்மை நோய் அறிகுறி கொண்டவர்கள் சிலர், சோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கப் பெறாமல் அவ்விடத்தை விட்டு வெளியேறினர். சிலர் கூட, உதவியைத் தேடும் வகையில், எல்லையைக் கடந்து கனடாவுக்குப் புறப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.