ஒரே சீனா கொள்கையை ஆதரிக்க பன்னாட்டு அரசாங்கள் வலியுறுத்துதல்
2022-08-07 16:51:08

அண்மையில் பன்னாட்டு அரசுகள் நியாயத்துடன் குரல் எழுப்பி அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. தைவான் சுதந்திர சக்தியை அமெரிக்கா ஆதரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே சீனா கொள்கையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டுமென பன்னாட்டு அரசுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபதா அல்-சீசீ கூறுகையில், தைவான் விவகாரத்தில் எகிப்தின் கொள்கை நிலையானதும் உறுதியானதுமாகும். ஒரே சீனா கொள்கையை எகிப்து உறுதியாகப் பின்பற்றி வருகிறது. இது உலகின் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மையைப் பேணிக்காப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

நேபாளம் ஒரே சீனா கொள்கையில் உறுதியாக ஊன்றி நிற்கும். இறையாண்மை, உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் நேபாளமும் சீனாவும் ஒன்றொன்று உறுதியாக ஆதரவளிக்கும் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கென்யா, வங்காளத்தேசம், ஈராக், அல்ஜீரியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளும் அறிக்கை, உரை உள்ளிட்டவற்றின் மூலம், ஒரே சீனா கொள்கையைக் கடைப்பிடிப்பதாக வலியுறுத்தி சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன.