முதல் 7 திங்கள்களில் 23லட்சம் கோடி யுவான் தாண்டிய சீன வெளிநாட்டு வர்த்தகம்
2022-08-07 16:54:23

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 7ஆம் நாள் வெளியிட் தரவின்படி, இவ்வாண்டின் முதல் 7 திங்கள்காலத்தில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மொத்த தொகை 23லட்சத்து 60ஆயிரம் கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 10.4விழுக்காடு அதிகமாகும். அவற்றில் இறக்குமதித் தொகை 10லட்சத்து 23ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டை விட, 5.3விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆசியான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கான மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை முறையே 3லட்சத்து 53ஆயிரம் கோடி, 3லட்சத்து 23ஆயிரம் கோடி மற்றும் 2லட்சத்து 93ஆயிரம் கோடி யுவான் ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, முறையே 13.2விழுக்காடு, 8.9விழுக்காடு மற்றும் 11.8விழுக்காடு அதிகரித்துள்ளன. சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தக தொகையில் 15விழுக்காடு வகிக்கும் ஆசியான் தொடர்ந்து சீனாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக விளங்குகிறது.

RCEP எனும் விரிவான பிராந்தியப் பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தின் சாதனைகள் காணப்படுகின்றன. முதல் 7 திங்கள்காலத்தில் RCEP உறுப்பு நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை 7.5விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் RCEP ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு, அதன் உறுப்பு நாடுகளிடையே வர்த்தகம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.