டிரம்பின் தோட்டத்துக்கான தேடுதல் உத்தரவு வெளியீடு
2022-08-13 17:34:57

அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் டிரம்பின் மார்-எ-லாகோ தோட்டத்துக்கான தேடுதல் உத்தரவு ஆகஸ்டு 12ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி, கூட்டாட்சி அரசின் ஆவணங்களைத் தவறாகக் கையாளுதல், சட்ட நீதிக்கு இடையூறு விளைவித்தல், தேசிய பாதுகாப்பு தகவல்களை அனுப்புதல் ஆகிய 3 சாத்தியமான குற்றச் செயல்களில் டிரம்ப் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கைப்பற்றப்பட்ட பொருட்கள் பட்டியலின்படி, மார்-எ-லாகோ தோட்டத்திலிருந்து புலனாய்வாளர்கள் 33 பொருட்களை எடுத்துச் சென்றனர். அவற்றில் உச்ச நிலை இரசியமாகக் குறிக்கப்பட்ட ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.