இந்தியாவில் சதுப்பு நிலங்கள் அதிகரிப்பு
2022-08-14 16:40:11

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் சதுப்பு நிலங்களின் பட்டியலில் இந்தியா மேலும் 11 சதுப்பு நிலங்களைச் சேர்த்துள்ளது. இதனால் நாடளவில் இத்தகைய நிலங்களின் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

இந்த புதிய 11 சதுப்பு நிலங்களில் 4 தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. ஒடிசா, இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர், மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் முறையே, 3, 2, 1, 1 உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 76 ஆயிரத்து 316 ஹெக்டர் ஆகும்.

14 ராம்சர் சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.