தேசத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கிற்கு இந்திய அரசுத்தலைவர் பாராட்டு
2022-08-15 18:22:45

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கைப் பாராட்டியுள்ளார்.

போர் விமானிகள் முதல் விண்வெளி விஞ்ஞானிகள் வரை அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் மகத்தான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்று முர்மு கூறியுள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவின் 15வது அரசுத்தலைவராகப் பதவியேற்ற பிறகு திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரை இதுவாகும்.

"இந்தியப் பெண்கள் தன்னம்பிக்கையைப் பெற்று வருகின்றனர். கிராம அளவில் 14 இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் 'பஞ்சாயத் ராஜ்' எனப்படும் உள்ளூர் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். நம் நாட்டு வீராங்கனைகள், சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர்" என்று முர்மு கூறினார்.