ஜூலையில் மீட்சியுற்று வரும் சீனப் பொருளாதாரம்
2022-08-15 16:32:31

சீனப் பொருளாதாரம் ஜூலை மாதத்தில் மீட்சிப் போக்கைக் காட்டியுள்ளது என்று தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபுலின்ஹூவே 15ஆம் நாள் தெரிவித்தார்.

தரவுகளின்படி, சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மதிப்புத் தொகை கடந்த ஆண்டின் ஜூலையில் இருந்ததை விட, 3.8விழுக்காடு அதிகரித்தது. ஜூலையில் சீன சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறைத் தொகை 3லட்சத்து 58ஆயிரத்து 700கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டின் ஜூலையில் இருந்ததை விட, 2.7விழுக்காடு அதிகரித்தது.