தைவான் சுதந்திர சக்திகளுக்கு சீனா தடை நடவடிக்கை
2022-08-16 17:08:27

பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்ட தைவான் சுதந்திர சக்திகள் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் விவகார பணியகத்தின் செய்திதொடர்பாளர் 16ஆம் நாள் தெரிவித்தார்.

தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை செயல், சீன தேசிய ஒன்றிணைப்பையும் தேசிய மறுமலர்ச்சியையும் கடுமையாகப் பாதித்துள்ளது. நீண்டகாலத்தில் தைவான் சுதந்திரவாதிகள், சொந்த நலனுக்காக, வெளிப்புற சக்திகளுடன் தொடர்பு கொண்டு, தைவான் சுதந்திரத்துக்கு முயற்சி செய்து, தைவான் நீரிணை இருக்கரைகளுக்கிடையில் சர்ச்சையை  ஏற்படுத்தி வருகின்றனர். தைவான் நீரிணையின் அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைத்து வந்த அவர்கள், பெலோசி தைவானில் பயணம் மேற்கொண்ட போது மேலும் மோசமாக செயல்பட்டனர். சீனாவைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளையும் சீன தேசிய ஒன்றிணைப்பில் தலையீடு செய்யும் செயல்களையும் அனுமதிக்க மாட்டோம். தைவான் சுதந்திர சக்திகள் எவருக்கும் வாய்ப்பு அளிக்க மாட்டோம் என்று செய்திதொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.