குவாங்டோங்கில் லீ கெச்சியாங்கின் ஆய்வுப் பயணம்
2022-08-18 16:14:50

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் தலைமை அமைச்சருமான லீ கெச்சியாங், ஆகஸ்டு 16, 17 ஆகிய நாட்களில் குவாங்டோங் மாநிலத்தின் ஷென்ஜென் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். ஷென்ஜென் நகரின் வெகுஜன தொழில் புரிதல் மற்றும் புத்தாக்கம் பற்றியும், குவாங்டோ மாநிலம் மற்றும் ஷென்ஜென் நகரின் வேலைவாய்ப்பு நிலைமை பற்றியும் அவர் கேட்டறிந்தார்.

புதிய வளர்ச்சிக் கருத்தை முழுமையாகச் செயல்படுத்தி, நோய் தொற்று தடுப்பையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியும் திறம்பட ஒருங்கிணைத்து, வளர்ச்சியை நிலைப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவது, மக்கள் வாழ்க்கை தரத்தைப் பேணிக்காப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, சீர்திருத்தம் மற்றும் திறப்பு மூலம் புதிய உயிராற்றலைப் பெற்று, பொருளாதார இயக்கத்தை உரிய வரம்புக்குள் நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், வெளிநாட்டுத் திறப்பானது சீனாவின் அடிப்படை கொள்கையாகும். சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், திறப்பு விரிவாக்கத்தில் சீனா நிலைத்து நின்று, ஒன்றுக்கு ஒன்று நன்மை அளித்து கூட்டு வெற்றி பெறுதற்கு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.