சீனாவில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை அதிகரிப்பு
2022-08-18 19:50:04

சீன வணிக அமைச்சகம் ஆகஸ்டு 18ஆம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை திங்கள் வரை, சீனாவில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 79833 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.3 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் சீனாவில் முதலீடு செய்த தொகை முறையே 44.5, 36.3, 26.9 மற்றும் 23.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.