சீன-இந்திய உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2022-08-19 19:09:27

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படாமல் இருந்தால் ஆசியாவின் நூற்றாண்டு வர முடியாது என்றார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 19ஆம் நாள் கூறுகையில், அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் புதிதாக வளரும் நாடுகளாகும். இரு நாடுகளுக்கிடையிலான பொது நலன்கள் கருத்து வேற்றுமைகளை விட அதிகம். இந்தியா சீனாவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய பொது கருத்துக்களைச் செயல்படுத்தி, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாடுகள் மற்றும் பரந்துபட்ட வளரும் நாடுகளின் பொது நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்