அரசு சார் உடன்படிக்கை பற்றி தைவானுடனான அமெரிக்காவின் தொடர்புக்கு சீனா எதிர்ப்பு
2022-08-19 16:19:22

அமெரிக்கா-தைவான் இடையே வர்த்தக முன்மொழிவு பற்றிய பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இது பற்றிய கேள்விக்கு சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மா சியாவ்குவாங் 18ஆம் நாள் பதிலளிக்கையில், இறையாண்மை பொருள் அல்லது அரசு சார் உடன்படிக்கை பற்றி சீனாவின் தைவான் பகுதியுடன் அமெரிக்கா தொடர்பு கொள்வதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்கத் தரப்பு நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனாவின் ஒன்றிணைப்பு மற்றும் தேசிய வளர்ச்சியைத் தடுக்கும் செயல் வெற்றி பெறாது என்றும் அவர் கூறினார்.