காபூலில் ஏற்பட்டுள்ள வெடிப்பு சம்பவத்தில் 21 பேர் பலி
2022-08-19 15:57:59

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் 17ஆம் நாளிரவு வெடி குண்டு வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் காவற்துறை 18ஆம் நாள் உறுதி செய்தது.

இதுவரை எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.

அண்மையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன.