ரஷியாவின் கருங்கடல் கப்பற்படை மீது ஆள்ளில்லா விமானத் தாக்குதல்
2022-08-21 17:11:32

ரஷியாவின் கருங்கடல் கப்பற்படையின் தலைமையகம் 20ஆம் நாள் ஆள்ளில்லா விமானத் தாக்குதலுக்குள்ளாகியது என்று செவாஸ்தொபோல் நகராட்சித் தலைவர் அன்று சமூக ஊடகத்தில் தெரிவித்தார். இத்தாக்குதலில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ரஷியாவின் மீது தடை நடவடிக்கைகளை விரிவாக்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இவற்றில் அனைத்து ரஷிய குடிமக்களின் மீது ஐரோப்பிய நாடுகளுக்கான நுழைவுத் தடை போன்ற நடவடிக்கைகள் நாசிஸ கொள்கையின் செயல்பாடாகும் என்று தாஸ் செய்தி நிறுவனம் ரஷிய பாதுகாப்பமைச்சர் சாவ்யிகூவின் கூற்றை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது.

இதனிடையில், உக்ரேனுக்கு 77.5 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ உதவித் திட்டத்தை அமெரிக்கா அண்மையில் அங்கீகரித்துள்ளது. உக்ரேன் பாதுகாப்பமைச்சர் லேஸ்நிகோவ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இச்செய்தியை உறுதிசெய்து அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.