இலங்கையில் மண்ணெண்ணெய் விலை உயர்வு
2022-08-22 11:28:28

இலங்கை அரசுக்கு சொந்தமான எரிபொருள் விநியோக நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் நிறுவனம், நஷ்டத்தைக் குறைப்பதற்காக மண்ணெண்ணெய் விலையை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல்  உயர்த்தியுள்ளது.

ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் விலையை 253 இலங்கை ரூபாயிலிருந்து 340 ரூபாயாக அதிகரிப்பதாக, சிலோன் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மண்ணெண்ணெய், சில பலவீனமான குடியிருப்புப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக இது 87 ரூபாய் மானிய விலையில் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.