சீன-தெற்காசிய வளர்ச்சி ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை
2022-08-24 11:03:54

 தெற்காசிய நாடுகளுடன் சேர்ந்து வளர்ச்சிக்கான உத்திநோக்கு தொடர்பை மேலும் ஆழமாக்கி, நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டாக தரமிக்க கூட்டாளியுறவை அமைக்கவும், முழு உலக வளர்ச்சி முன்னெடுப்பு தெற்காசியாவில் முதலில் செயலாக்கப்படுவதை முன்னேற்றி, ஆரம்பக்கட்ட சாதனைகளை அதிகமாகப் பெற்று, பிரதேசத்தின் அமைதியான வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கு உதவி அளிக்கவும் சீனா விரும்புகின்றது என்று சீனத் தேசிய சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் டெங் போசிங் தெரிவித்தார்.

23ஆம் நாள் செவ்வாய்கிழமை நடைபெற்ற சீனா-தெற்காசிய வளர்ச்சி ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையில் அவர் இவ்வாறு கூறினார்.

சீனா, மாலத்தீவு, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கூட்டாக ஆலோசனை வழங்குவது ஆகியவை குறித்து பரிமாற்றம் மேற்கொண்டனர்.