இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவல்
2022-08-25 15:00:53

தக்காளி காய்ச்சல் இந்தியாவில் பரவி வருவதுடன், 9 வயதுக்குள்ளான குழந்தைகளில் 100க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு 24ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

கேரளாவில் முதல் தக்காளி காய்ச்சல் பாதிப்பு மே திங்கள் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாடு, ஹரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தக்காளி காய்ச்சல் சோதனை, தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய ஆலோசனையை சுகாதார அமைச்சகம் 23ஆம் நாள் வெளியிட்டது.