சீன-ரஷிய காணொளி பரிமாற்ற நடவடிக்கை
2022-08-26 20:15:36

"சீன-ரஷிய காணொளி பரிமாற்ற நடவடிக்கை" ஆகஸ்டு 26ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி உயர்தர நிகழ்ச்சிகள், ரஷிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ரஷிய டுடே செய்தி நிறுவனம் முதலிய ரஷியாவின் முக்கியச் செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட உள்ளன.

இந்நடவடிக்கையில் துவக்க விழாவில், சீனாவுக்கான ரஷியத் தூதர் டெனிசோவ் ரஷிய அரசின் சார்பாக, ரஷிய நட்புறவுப் பதக்கத்தைச் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருக்கு வழங்கினார்.