சீனாவில் கிராம வளர்ச்சியை ஊக்குவிக்கும் இணையச்சேவை
2022-08-27 19:58:48

முன்னதாக, ஸிலியன் கிராமம், சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள தீவிர வறுமையில் சிக்கியிருந்த கிராமமாகும். 2012இல், இக்கிராமத்துக்கு அருகில் 4 நகரும் தொலைத்தொடர்பு நிலையங்கள் மட்டுமே நிறுவப்பட்டன. 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 4 நகரும் தொலைத்தொடர்பு அடிப்படை நிலையங்கள் இக்கிராமத்தில் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டன. 2020ஆம் ஆண்டு வரை, கிராமம் முழுவதும் 4ஜி இணைய இணைப்பு கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் 5ஜி இணையச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியுடன், ஸிலியன் கிராமத்தின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. அங்கு மூங்கில் கூடைகள் போன்ற தயாரிப்புகள் இணைய வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறன.

தென்மேற்கு சீனாவிலுள்ள சௌஜிஸுய் என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் மிளகாய் சாஸ் இணையம் மூலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு விற்கப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 10ஆண்டுகாலத்தில் சீனாவின் வறிய பகுதிகளில் தொலைத்தொடர்புத் துறையில் வரலாற்று ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளது. நாடு முழுவதும் 10கோடிக்கும் அதிகமான கிராமக் குடும்பங்களில் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு பெற்றுள்ளது.