சின்ஜியாங்கில் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் இணைப்பு வசதிகள்
2022-08-27 19:57:34

கடந்த 10 ஆண்டுகளில், சீனாவின் சின்ஜியாங்கில் இணைப்பு வசதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதில்,118 சர்வதேச போக்குவரத்து வழிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இது, நாடளவில் மூன்றில் ஒரு பகுதி வகிக்கிறது. மேலும், சாலை, இருப்புப்பாதை, பயணியர் விமானம், குழாய், தொலைத்தொடர்பு ஆகிய 5 இணைப்பு வசதிகளைக் கொண்ட வலைப்பின்னல் அடிப்படையில் உருவாக்கப்ப்பட்டுள்ளது.

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் 27ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற சீனாவின் பத்தாண்டுக் காலத்தில் சின்ஜியாங் என்ற கருப்பொருளிலான  செய்தியாளர் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

தற்போது, 25 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் 21 ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் சின்ஜியாங் கையெழுத்திட்டுள்ளது. மேலும் 176 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் பொருளாதார வர்த்தக உறவை உருவாக்கியதோடு, நட்பு நகரங்களாக 45 நகரங்களுடன் இணைந்துள்ளன என்றும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.