உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 கோடியே தாண்டியது
2022-08-28 17:04:51

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஆகஸ்டு 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, உலகளவில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகம். அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 146ஆகும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 43 ஆயிரத்து 838 எட்டியது.