சேவை வர்த்தகத்தின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விருப்பம்
2022-09-02 19:07:55

சேவை வர்த்தகத்திற்கான சீனச் சர்வதேச கண்காட்சி உலகளாவிய சேவைத் துறையில் மிகப் பெரிய பன்னோக்க கண்காட்சியாகும். பன்னாடுகள் சீனாவுடன் சேவை வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான மேடையுமாகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து உலக வளர்ச்சி முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தி சேவை வர்த்தகத்தின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புகிறது. சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்களுக்குத் தலைசிறந்த வணிகச் சூழலை உருவாக்கி உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு மேலும் பெரிய பங்கு ஆற்றவும் விரும்புகிறது. கரோனா தொற்று மற்றும் மந்தமான உலகப் பொருளாதார வளர்ச்சி பின்னணியில், சீனா இக்கண்காட்சியை நடத்தியதன் முக்கியத்துவம் பற்றி கேட்டப்பட்ட போது சீனச் செய்தித் தொடர்பாளர் ஜௌ லீச்சியன் செப்டம்பர் 2ஆம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.