சீனாவின் சாதனத் தொழிற்துறையின் வளர்ச்சி
2022-09-06 18:41:11

சீன தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் உயர் நிலை சாதனத் தயாரிப்பு தொழிலின் வளர்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டம் ஒன்றை  6ஆம் நாள் நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் சாதனத் தயாரிப்பு தொழில் முக்கியமான சாதனைகளைப் பெற்றுள்ளது என்று இவ்வமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

2012 முதல் 2021ஆம் ஆண்டு வரை, இத்தொழிலின் கூட்டு மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 8.2 விழுக்காடு அதிகரித்து வந்தது. 2021ஆம் ஆண்டின் இறுதி வரை, இத்துறையில் ஆண்டு வருமானம் 2 கோடி யுவானுக்கும் அதிகமான தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 5 ஆயிரத்து 100. இது 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட 45.3 விழுக்காடு அதிகம்.

இத்தொழிலின் கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. 2021ஆம் ஆண்டில் நெடுநோக்குதன்மை வாய்ந்த புதிய தொழிற்துறையுடன் தொடர்புடைய துறைகளின் வருமானம் 20 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.