சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான சீனா-அரபு மன்றத்தின் 3ஆவது கருத்தரங்கு
2022-09-09 18:59:21

சீனா-அரபு நாடுகள் மன்றத்தின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான 3ஆவது கருத்தரங்கு 8ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது. சீனா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, கத்தார், ஈராக் உள்ளிட்ட நாடுகளின் 20க்கும் மேலான நிபுணர்கள் உலக வளர்ச்சி முன்மொழிவு மற்றும் சீனா-அரபு நாடுகளின் வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.

சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கான சீன-அரபு ஆய்வு மையத்தின், சீன வெளியுறவு அமைச்சகம் இக்கருத்தரங்கை நடத்தியது.

சீனா மற்றும் அரபு நாடுகள், வளர்ச்சி பற்றிய ஒத்த கருத்துக்களை அதிகரித்து, நெடுநோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, புதிய யுகத்தை எதிர்நோக்கும் சீன-அரபு பொது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு விவகாரத்துக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி ச்சாய் ஜுன் இதில் தெரிவித்தார்.