அரசி 2ஆவது எலிசபெத் மறைவு ஷிச்சின்பிங் இரங்கல்
2022-09-09 16:32:29

பிரிட்டன் அரசி 2ஆம் எலிசபெத் மறைவு குறித்து சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாள் வெள்ளிகிழமை அந்நாட்டில் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு இரங்கல் செய்தி அனுப்பினார்.

சீன அரசு மற்றும் மக்களின் சார்பிலும் தனது சார்பிலும், ஷிச்சின்பிங் அரசியின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு, பிரிட்டிஷ் அரச குடும்பம், அரசு மற்றும் மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

பிரிட்டனில் மிக நீண்டகாலம் அரசியாக இருந்து வந்த எலிசபெதுக்கு, பரந்த அளவில் பாராட்டப்பட்டவர். சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட முதலாவது பிரிட்டிஷ் அரசி இவராவார். அவரின் மறைவு, பிரிட்டன் மக்களுக்கு மாபெரும் இழப்பைக் கொண்டு வந்துள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும், சீன-பிரிட்டன் உறவின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு, மன்னர் சார்லஸுடன் இணைந்து, இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆண்டு நிறைவை அடிப்படையாகக் கொண்டு, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தவிரவும், அரசி எலிசபெத் மறைவு குறித்து சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங், அந்நாட்டு தலைமையமைச்சர் டிரஸுக்கு இரங்கல் செய்தி அனுப்பினார்.