பிரிட்டனின் புதிய அரசராக மூன்றாம் சார்லஸ்
2022-09-10 20:30:26

பிரிட்டனின் புதிய அரசராக இளவரசர் சார்லஸ் 10ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

9ஆம் நாளிரவு அவர் தொலைகாட்சி மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில், தாய் இரண்டாம் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அரசக் குடும்பம் மற்றும் நாட்டுக்கு அளித்த அவருடைய பங்கிற்கும் நன்றி தெரிவித்தார். ராணியைப் போல அரசியல் அமைப்பு சட்டத்தை உறுதியாக பேணிக்காப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

73 வயதான மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் வரலாற்றில் மிக அதிக வயதில் அரசராவார்.