நிலா விழா விடுமுறையின் முதல் நாளில் பயணம் மேற்கொள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள்
2022-09-11 16:58:47

நிலா விழா விடுமுறையின் முதல் நாளில், சீனாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்வழிகளின் மூலம் சுமார் 1 கோடியே 80 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் நெடுஞ்சாலை பேருந்துப் போக்குவரத்து பாதையின் மூலம் சுமார் 1 கோடியே 75 இலட்சம் பேர் பயணித்துள்ளனர்.  நீர் வழிகளின் மூலம் சுமார் 5 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று சீனப் போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் கூறுகின்றது.