நிலா விழாவின் கலை நிகழ்ச்சிக்கு உலகளவில் வரவேற்பு
2022-09-11 16:02:38

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2022ஆம் ஆண்டு நிலா விழாவுக்கான கலை நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் நாளிரவு  ஒளிப்பரப்பப்பட்டது. பல்வேறு மேடைகளில் நிகழ்ச்சியின் மொத்த பார்வை எண்ணிக்கை இதுவரை 23 கோடியே 80 இலட்சத்தை எட்டியது. அமெரிக்காவின் சீன மொழி தொலைக்காட்சி, கனடாவின் ஐபிடிவி(IPTV), ஐரோப்பிய சீன மொழி தொலைக்காட்சி, சீன-ஐக்கிய அரபு அமீரக செயற்கைக்கோள் தொலைக்காட்சி, ஜப்பானின் நிக்கொநிக்கொ(NICONICO)காணொளி இணையம் முதலிய வெளிநாட்டு மேடைகளில் இக்கலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.