ரஷியாவில் லி ஷன் சூவின் நட்பார்ந்த பயணம்
2022-09-11 16:55:54

ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் தலைவர் வோலோடினின் அழைப்பின் பேரில், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் லி ஷன் சூ 7ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை ரஷியாவில் அதிகாரப்பூர்வ நட்பார்ந்த பயணம் மேற்கொண்டார். விளாடிவோஸ்டாக் நகரில் ரஷிய அரசுத் தலைவர் புதினை அவர் சந்தித்துப் பேசினார். மாஸ்கோவில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் தலைவர் மற்றும் கூட்டாட்சி கமிட்டியின் தலைவருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்திய அவர், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் ஐந்து பெரிய கட்சிக் குழுக்களின் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

புதினைச் சந்தித்துப் பேசிய போது லி ஷன் சூ கூறுகையில், ஷிச்சின்பிங் மற்றும் புதின் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களின் நெடுநோக்குத் தலைமையில், புதிய காலத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு வலிமையான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி வருகின்றது என்றார்.

புதிய காலத்தில் இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவு, சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற ரஷிய தரப்பு வாழ்த்துகிறது என்று புதின் கூறினார்.