சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி தலைவர் நேபாளத்தில் பயணம்
2022-09-15 20:10:01

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி தலைவர் லீச்சென்ஷூ செப்டம்பர் 12 முதல் 15ஆம் நாள் வரை நேபாளத்தில் அதிகாரப்பூர்வ நட்புப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் காத்மாண்டில் நேபாள அரசுத் தலைவர் பண்டரி அம்மையார், தலைமையமைச்சர் டெவுபா, பிரதிநிதிகள் அவையின் தலைவர், மாநிலங்களவை தலைவர் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார்.

பண்டரி அம்மையாருடன் லீச்சென்ஷூ கூறுகையில், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காத்து, செழுமையை நனவாக்கும் நேபாளத்துக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும். அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவுகள், உலகப் பாதுகாப்பு ஆலோசனைகள் ஆகியவற்றின் செயலாக்கத்தில் நேபாளம் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுப்பதை சீனா வரவேற்கிறது. தவிரவும் வரும் 20ஆம் நாள் நேபாளத் தேசிய தினம் குறித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம் என்று கூறினார்.

பண்டரி அம்மையார் கூறுகையில், நேபாளத்தின் நம்பத்தக்க நண்பராகவும் கூட்டாளியாகவும் சீனா எப்போதும் திகழ்கிறது என்று தெரிவித்தார்.