வளரும் நாடுகளில் சிறிய பால் பண்ணைகளை உருவாக்க சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பிடம் இந்தியா கேட்டுக்கொண்டது
2022-09-16 18:53:05

இந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வளரும் நாடுகளில் அதிக உற்பத்தி தரும், நிலையான, சூழலுடன் இணக்கமான, தரம் வாய்ந்த மற்றும் லாபம் ஈட்டக்கூடிய சிறிய பால் பண்ணைகளை உருவாக்குவதற்கு பொருத்தமான, சமகால, நடைமுறை மற்றும் செலவு குறைந்த தீர்வுகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தும் முயற்சிகளை இயக்குமாறு சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பிடம் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய உமிழ்வுகளில் விவசாயத்தின் தாக்கத்தைக் குறைக்கும் உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியா மாற விரும்புகிறது என்று கோயல் வலியுறுத்தினார்.

2022 உலக பால் பண்ணை உச்சி மாநாடு, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியால் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நான்கு நாட்கள் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில், தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், விவசாயிகள் மற்றும் கொள்கை திட்டமிடுபவர்கள் உட்பட, 50 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.