13540கோடி டாலர் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் 7ஆவது சீன-யுரேசிய கண்காட்சியில் கையொப்பம்
2022-09-23 15:18:29

7ஆவது சீன-யுரேசிய கண்காட்சி செப்டம்பர் 19முதல் 22ஆம் நாள் வரை சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்றது. கூட்டு கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம், பகிர்வு மற்றும் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தை வரவேற்பது நடப்பு கண்காட்சியின் கருப்பொருளாகும். இதுவரை 13540கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 365 ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் இக்கண்காட்சியின் போது கையொப்பமிட்டப்பட்டன. இது முன்பை விட, மிக அதிகமான பதிவாகும்.