புதுப்பிக்க வல்ல மின்னாற்றல் நுகர்வு அதிகரிப்பு
2022-09-23 15:16:34

சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் அண்மையில் வெளியிட்ட 2021ஆம் ஆண்டு தேசியப் புதுப்பிக்க வல்ல மின்னாற்றல் வளர்ச்சிக்கான கண்காணிப்பு மதிப்பீட்டு அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் தேசியளவில் புதுப்பிக்க வல்ல மின்னாற்றலின் நடைமுறை நுகர்வளவு 2 இலட்சத்து 44ஆயிரத்து 460 கோடி கிலோவாட் எட்டி, மொத்த மின்னாற்றல் நுகர்விலும் 29.4 விழுக்காடு வகித்து, கடந்த ஆண்டில் இருந்ததை விட 0.6 விழுக்காடு அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு இறுதி வரை, தேசியப் புதுப்பிக்க வல்ல மின்னாற்றல் உற்பத்தியின் திறன், 106கோடியே 30 இலட்சம் கிலோவாட் எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 13.8 விழுக்காடு அதிகரித்து, மொத்த மின்னாற்றல் உற்பத்தித் திறனிலும் 44.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.