வளர்ந்து வரும் ஆசிய நாடுகளின் குடிமக்கள் தனிப்பட்ட மற்றும் தேசிய எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கை
2022-09-24 18:52:42

உயர் வருமானமுடைய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து எதிர்மறை கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். இருப்பினும் சீனா, இந்தியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளர்ந்து வரும் ஆசிய நாடுகளின் குடிமக்கள் தேசிய எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக ஒரு புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சொஸ் உடன் இணைந்து ஃபியூச்சர் இன்வெஸ்ட்மென்ட் இனிஷியேட்டிவ் என்ற நிறுவனம் 13 நாடுகளைச் சேர்ந்த 1,30,000 குடிமக்களிடம் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பில், பெரும்பாலானோர் வாழ்க்கைச் செலவு உயர்வு பற்றி கவலைகொள்வதாக தெரிவித்தனர்.

ஃபியூச்சர் இன்வெஸ்ட்மென்ட் இனிஷியேட்டிவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் அட்டியாஸ் கூறுகையில், "இது உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ள ஒரு முக்கிய ஆய்வாகும்" என்று கூறினார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சனைகளைத்  தீர்ப்பதற்கு வரைபடத்தை வழங்கச் செயல்படுகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.