பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் வாங்யீ பங்கெடுப்பு
2022-09-24 19:06:14

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 22ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் பங்கெடுத்தார்.

வாங்யீ கூறுகையில், சர்வதேச சூழ்நிலை சிக்கலாக மாறி கொண்டே பல்வேறு அறைக்கூவல்கள் ஏற்பட்டு வரும் இக்காலத்தில், பாதுகாப்பானது வளர்ச்சிக்கான அடிப்படையாகும். அதேவேளை, வளர்ச்சியானது பாதுகாப்புக்கான உத்தரவாதமாகும். பிரிக்ஸ் நாடுகள், திறப்பு கொண்ட உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்கி, வலிமை, பசுமை மற்றும் ஆரோக்கியமான உலக வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்றார்.

மேலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்புமுறை, ஐ.நாவின் அதிகாரம் மற்றும் ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டைப் பேணிக்காத்து, சர்வதேச ஒழுங்கு மேலும் நேர்மையான திசைக்கு முன்னேறுவதைத் தூண்ட வேண்டும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.